Home> Tamil Nadu
Advertisement

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரை ஓரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து இருந்தது. 

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் (Edappadi Palaniswami), துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தனர். தற்போது ஜெயலலிதாவுக்கு (Jayalalitha) நினைவிடம் கட்டப்படும் பணிகள் முடிவடைந்து. 

ALSO READ | 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை!!

இந்தநிலையில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இதனைத்தொடர்ந்து மெரினா கடற்கரை (Marina Beach) காமராஜர் சாலையில் இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலையில் திருப்பிவிடப்படும். பிற வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்படும். 

அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More