Home> Tamil Nadu
Advertisement

அரசியலில் இருந்து விலகுகிறேன் - என்னை துன்புறுத்த வேண்டாம்: ஜெ.தீபா

அரசியலுக்கு முழுக்கு போட்ட முன்னால் முதலவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.

அரசியலில் இருந்து விலகுகிறேன் - என்னை துன்புறுத்த வேண்டாம்: ஜெ.தீபா

சென்னை: நான் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னால் முதலவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முகநூலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் ஜெ.தீபா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டதாவது, 

நான் முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்த வேண்டாம். அதேவேளையில் என்னை தொலைப்பேசியிலும் அழைக்காதீர்கள் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். தீபா பேர்வை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

Read More