Home> Tamil Nadu
Advertisement

ஓபிஎஸ் மன உளைச்சலை கொடுத்துவிட்டார் - வேதனைப்படும் ஜெயக்குமார்


ஓ.பன்னீர்செல்வத்தால் தொண்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 ஓபிஎஸ் மன உளைச்சலை கொடுத்துவிட்டார் - வேதனைப்படும் ஜெயக்குமார்

அதிமுகவுக்குள் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒற்றைத் தலைமை பிரச்னையால் மீண்டும் கட்சி இரண்டாகுமோ என்ற கவலையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள்.

மேலும், இபிஎஸ்ஸோ, ஓபிஎஸ்ஸோ விட்டுகொடுத்து சென்று கட்சியை வளர்க்க வேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஒற்றைத் தலைமைதான் என்பதில் இபிஎஸ், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓபிஎஸ்ஸும் தீவிரமாக இருக்கின்றனர்.

இதற்கிடையே ஒற்றைத் தலைமை வந்துவிட்டால் இபிஎஸ் கைகளுக்குள் கட்சி முழுமையாக சென்றுவிடும் என்பதால் அதனை தடுக்கும் நோக்கில் பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். 

fallbacks

அங்கு மோடியிடமும், அமித்ஷாவிடமும் பேசிய அவர் இன்று மாலை தமிழகம் திரும்புகிறார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் 5 குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு எங்கள் தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் விளக்கமாகவே பதில் கொடுத்திருக்கிறார். அதை வைத்திலிங்கம் பார்த்து தெளிவுப்பெறலாம். 

fallbacks

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டபோது எடப்பாடி பழனிசாமி உடனடியாக கண்டித்தார். தொண்டர்களையும் அமைதிப்படுத்தினார். யாரையும் அவமதிக்கும் நோக்கம் தொண்டர்களுக்கு கிடையாது.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்கள். 

அவருக்கு ஏன் வீண் மன உளைச்சல். ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள். அனைவரும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு கொடுப்பது போல அவரும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கொடுத்து கட்சியினரோடு ஒத்து போயிருக்கலாம். 

மேலும் படிக்க | முடிந்தது டெல்லி மீட்டிங் - ஆதரவை மீட்க சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ்

ஆனால் அவர் நீதிமன்றத்தை நாடுகிறார். தேர்தல் ஆணையத்தை நாடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உளைச்சல் இல்லை. அவர் செய்யும் காரியங்களால் அதிமுக தொண்டர்கள்தான் தீவிரமான மன உளைச்சலில் உள்ளனர். 

அதிமுகவில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜகா தலையீடு இல்லை. 3ஆவது நபரின் தலையீட்டை அதிமுகவும் ஏற்காது” என்றார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More