Home> Tamil Nadu
Advertisement

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை - மதுரை ஐகோர்ட் அதிரடி

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்திற்கு தடை - மதுரை ஐகோர்ட் அதிரடி

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்ற ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். 

கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வருடன் நேற்று அந்த கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மொத்தமுள்ள 27 சங்கங்களில் 6 சங்கங்கள் இந்தக் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்றன.

fallbacks

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார். 

fallbacks

இன்று விசாரணைக்கு ஏற்றக்கொண்ட நீதிபதி கூறியது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த வேலைநிறுத்தம் தீர்வாகாது. நிர்வாகம் பாதிக்காத வகையில் தங்கள் தீர்வுகளை அரசுக்கு எடுத்து சொல்லவேண்டும். வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமை அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறிய நீதிபதி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 14-தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read More