Home> Tamil Nadu
Advertisement

திட்டமிட்டபடி GSLV MK3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: ISRO

திட்டமிட்டபடி GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது..... 

திட்டமிட்டபடி GSLV MK3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: ISRO

திட்டமிட்டபடி GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது..... 

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. இந்த கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

இந்த நிலையில் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய செயற்கைக்கோள் நிறுவனம் இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில், கஜா புயல் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்ற தகவலை அடுத்து செயற்கைக்கோள் ஏவப்படும் நேரம் மாற்றப்படும் என வதந்திகள் பரவிவந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இஸ்ரோ.

இதுகுறித்து, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் கூறுகையில், திட்டமிட்டபடி நவம்பர் 14 மாலை 5.08 மணிக்கு GSLV MK3விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் GSAT-29, MK3 எடுத்துச்செல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Read More