Home> Tamil Nadu
Advertisement

ஓபிஎஸ் உடன் கை கோர்கிறாரா டிடிவி, போஸ்டர் அடித்து தெறிக்கவிட்ட தொண்டர்கள்!

அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் படங்கள் ஒரே போஸ்டரில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் உடன் கை கோர்கிறாரா டிடிவி, போஸ்டர் அடித்து தெறிக்கவிட்ட தொண்டர்கள்!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அதிமுகவின் அரியாசனம் யாருக்கு என்ற போட்டி தொடர்ந்து நிலவி வருகிறது. இதில் அரசியல் அனுபவம், ஆளுமைக்கு உண்டான திறமை என்பதை எல்லாம் தாண்டி பதவிக்கான போட்டியே முன் நிற்கிறது. சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக பிளந்த அதிமுக தற்போது மூன்றாக பிளவு பட்டுள்ளது என்று கூறும் அளவுக்கு ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்ததாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்திருந்தார். அதிமுகவில் இருந்து ஏற்கனவே பிரித்துவிடப்பட்ட சசிகலா, தினகரன் மற்றும் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் ஆகிய மூவரும் ஒன்றாக இணைவார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருளாக அமைந்தது.

மேலும் படிக்க: Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ

fallbacks

ஒரு பக்கம் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக ஓபிஎஸ் கூறி வரும் நிலையில் அதிமுகவை துரோகிகள் கையில் இருந்து மீட்கப்போவது அமமுகதான் என டிடிவி தினகரனும் கூறி வருகிறார். இதற்கு இடையே சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்-சை அமமுகவிற்கு அழைப்பது சரியாக இருக்காது என கருத்து தெரிவித்தார்.

இதனால் அந்த பொருப்பில் இருந்து ஓபிஎஸ் விலகினால் அமமுகவில் சேர டிடிவி அழைப்பு விடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக அமமுகவில் இணைந்தால் அதிமுகவின் மாற்று கட்சியாக அமமுக உருவெடுக்குமோ என்ற பேச்சும் உருவாகியுள்ளது.

இதற்கு இடையேதான் அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் படங்கள் ஒரே போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி, பதவி சுகத்திற்காகவும், தனது அரசியல் சுய லாபத்திற்காகவும் ஓபிஎஸ்-யை உதாசினப்படுத்தியதுடன், முதல்வர் பதவியை வழங்கிய டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | New Wage Code: ஜூலை 1 முதல் புதிய சட்டம் அமல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More