Home> Tamil Nadu
Advertisement

பாஜக-வுடன் கை கோர்க்கப்போகிறாரா அழகிரி? உச்சத்தில் ஊகங்கள், சூடி பிடிக்கும் தேர்தல் களம்!!

கடந்த இரண்டு நாட்களில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை பயணத்தின் போது அழகிரி அவரை சந்திப்பார் என்றும், அவர் தேர்தலுக்கு முன்னதாக தனது சொந்த கட்சியைத் தொடங்குவார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

பாஜக-வுடன் கை கோர்க்கப்போகிறாரா அழகிரி? உச்சத்தில் ஊகங்கள், சூடி பிடிக்கும் தேர்தல் களம்!!

திமுக-விலிருந்து விலக்கப்பட்டு, நீண்ட நாட்களாக அரசியல் வனவாசத்தில் இருக்கும் எம்.கே.அழகிரி குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல ஊகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன.

முன்னதாக, தனது இளைய சகோதரரான ஸ்டாலினுடன் அழகிரிக்கு (MK Azhagiri) கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் கால் பதித்து வரும் பா.ஜ.க-வில் சேர அழகிரி ஆர்வம் காட்டுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை பயணத்தின் போது அழகிரி அவரை சந்திப்பார் என்றும், அவர் தேர்தலுக்கு முன்னதாக தனது சொந்த கட்சியைத் தொடங்குவார் என்றும் செய்திகள் வந்துள்ளன. பல பிரபலங்களையும் மற்ற கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகளையும் தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அழகிரி நேரடியாக பாஜக-வில் இணைந்தாலோ அல்லது கட்சித் துவங்கி பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தாலோ, இரண்டுமே பாஜக-வுக்கு பெரிய அளவிலான நன்மையை அளிக்கும்.

எனினும், அழகிரியின் மகன் தயானிதி, இது குறித்து வந்துள்ள வதந்திகளை மறுத்து, புதிய கட்சி குறித்த தகவல் உண்மையல்ல என்று கூறியுள்ளார். பாஜக அவரது தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்று கேட்டபோது, அதைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார்.

அழகிரி, திமுகவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர், கட்சியின் மிகவும் பிரபலமான தலைவராக இருந்தார். கட்சியின் அனைத்து விஷயங்களிலும் அவரது கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேர்தல் கூட்டணிகள், வேட்பாளர்கள் முதல் பிரச்சார திட்டமிடல் வரை அனைத்திலும் அவர் செல்வாக்கு செலுத்தினார்.

ALSO READ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு

திமுக-வில் (DMK) கருணாநிதி அனைத்து அதிகாரத்தையும் வைத்திருந்தபோதே அழகிரி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மார்ச் 2014 இல், அப்போது கட்சியின் தெற்கு மாவட்டங்களின் செயலாளராக இருந்த அழகிரி பதவி நீக்கம் செய்யப்பட்டார். கட்சி உயர் கட்டளை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, அழகிரி திமுகவுக்குள் பதட்டத்தைத் தூண்ட முயன்றார். ஆனால் கட்சி எம்.கே.ஸ்டாலின் உடன் நின்றது. அப்போதிருந்து, அழகிரி அரசியலில் பெரிதாக ஈடுபடாமல் உள்ளார். அவர் தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க, பாஜகவுடன் கைகோர்க்கக்கூடும் என்ற தொடர்ச்சியான வதந்தியை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

பாஜகவைப் (BJP) பொறுத்தவரை, அழகிரி தெற்கில் ஒரு மிகப்பெரிய பலமாக இருப்பார். அழகிரியை தங்கள் கட்சியில் இணைப்பதில் பாஜக வெற்றி பெறுமா? இம்முறை சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் களம் மிகப்பெரிய மாற்றங்களைக் காணப்போகிறதா? பொறுத்திருந்துதன பார்க்க வேண்டும்.

ALSO READ: ஸ்டெர்லைட் போராட்டம்.... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More