Home> Tamil Nadu
Advertisement

18 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் தொடரும் விசாரணை; பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை

இதுவரை நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

18 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் தொடரும் விசாரணை; பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடிகர், தயாரிப்பாளர், கடன் அளித்தவர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் என அவர்களுக்கு சொந்தமான 38 இடங்கல் என பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கிடைத்த ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் வைத்து பார்த்தால் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தனது அறிக்கையில் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல் சினிமா பைனான்சியர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் மற்றும் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  மொத்தம் 38 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த சோதனை குறித்து தற்போது வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் சொந்தமான வீடு, அலுவலகம், சினிமா நிறுவனம் மற்றும் பங்குதாராக உள்ள நிறுவனங்கள் உள்பட இடங்களில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை நடைபெற்ற 38 இடங்களில் இருந்து கைப்பற்றிய ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் வைத்து பார்த்தால் ரூ.300 கோடி வரை வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் நடிகர் விஜய் வீட்டில் இதுவரை நடைபெற்ற சோதனையில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் வருமான வரித்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

fallbacks

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More