Home> Tamil Nadu
Advertisement

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் பிரித்திகா யாஷினி!!

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் பிரித்திகா யாஷினி!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஒரு திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை அன்று பொறுப்பு ஏற்றார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015-ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். 

பல இன்னலுக்கு பிறகு அவருக்கு தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார். 

இந்தியாவிலேயே முதல் முறையாக சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள் உள்பட சக பயிற்சியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போராடி பெற்ற பதவியை அவர் முழுமையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பிரித்திகா யாஷினிக்கு தர்மபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வேலை செய்ய பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை திருநங்கை பிரித்திகா யாசினி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரிடம் நேற்று வழங்கி வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் பயிற்சி பெற்ற 14 பேரும் போலீஸ் சூப்பிரண்டிடம் வாழ்த்து பெற்றனர். 

திருநங்கை பிரித்திகா யாசினி உள்ளிட்ட அனைவருக்கும் எந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது என்பது இன்று (திங்கட்கிழமை) தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Read More