Home> Tamil Nadu
Advertisement

மத்திய அமைச்சர் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் -மீனவர்கள் போராட்டம்

மத்திய அமைச்சர் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் -மீனவர்கள் போராட்டம்

இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு ராமேஸ்வரம் மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது. இதன் காரணமாக மற்ற மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து கரைக்கு திரும்பினர். 

தற்போது பிரேதப் பரிசோதனை முடிவுற்ற நிலையில், மீனவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும். மேலும் மத்திய அமைச்சர் வந்து சந்திக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வன்முறை ஏற்படாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு தமிழக போலீஸ் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது. 

Read More