Home> Tamil Nadu
Advertisement

‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்...

பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்...

பத்மஸ்ரீ விருது பெற்ற ‘யோகா பாட்டி’ கோவை நானம்மாள் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகா கலையை கற்றுக்கொண்டார்.

பின்னர் சுமார் 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டதுடன் பலருக்கும் யோகா பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்தார். இதனிடையே மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் இவரின் திறமையும் சேவையும் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் ‘நாரிசக்தி’ விருது மற்றும் 2017-ஆம் ஆண்டில் ’யோகா ரத்னா’ விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மாள் பாட்டி  ‘யோகா பாட்டி’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபநாட்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் தனது 99-ஆம் வயதில் கோவையில் இன்று காலமானார்.

நானம்மாள் பாட்டிக்கு 6 பிள்ளைகள், 12 பேரன்-பேத்திகள், 11 கொள்ளு பேரன்-பேத்திகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More