Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 24 மணி நேரத்தில்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 24 மணி நேரத்தில்

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை வலுவடைந்து உள்ளது. வடக்கு வங்க கடலில் இருந்து மேற்கு வங்க கடல்வரை உள்ள பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Read More