Home> Tamil Nadu
Advertisement

கடத்தப்பட்ட காதல் மனைவி... காவல்துறையிடம் கணவர் புகார்

கடத்தப்பட்ட காதல் மனைவியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் இளைஞர் புகார் அளித்துள்ளார்.   

கடத்தப்பட்ட காதல் மனைவி... காவல்துறையிடம் கணவர் புகார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சங்கர் முருகன். இவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். சங்கர்‌ முருகன், கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கடந்த 28.8.2022 அன்று திருப்பூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளனர். அதாவது சங்கர் முருகனின் சொந்த ஊருக்கு சென்று, அங்குள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

ஆனால், இவர்களின் திருமணத்துக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. அவர்களின் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் அதிருப்தியில் இருந்த அவர்கள், மகளை மீட்க முயற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென, கோமதி இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சங்கர் முருகன், சங்கரன் கோவில் நகர காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மனைவி காணவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்

இதனைத் தொடர்ந்து கோமதியின் உறவினர்களான பவுன் பாண்டியன் மற்றும் அணில், ராஜாம்மாள், அனிதா உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் கோமதியின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சங்கர் முருகன் மனைவி கோமதியின் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | 'ஸ்டாலின் ஒரு பொம்மை... மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்...' - செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More