Home> Tamil Nadu
Advertisement

ரூ. 200 கோடி மதிப்பிலான போதைப்பொருள்... மதுரையில் பிடிப்பட்ட மெத்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Drugs Seized in Madurai: மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸில் சென்னையை சேர்ந்த பயணியிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

ரூ. 200 கோடி மதிப்பிலான போதைப்பொருள்... மதுரையில் பிடிப்பட்ட மெத்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Drugs Seized in Madurai: நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் விவகாரம் தற்போது மதுரை வரை வந்துவிட்டது. போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்‌ தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை  ( DIRECTOR REVENUE INTELLGENGE) அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (பிப். 29) டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

சென்னையில் இருந்து  - செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பேக்குடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் (42)  ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் பின் தொடர்ந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கி பிடித்து இரண்டு போக்கையும் சோதனை செய்தனர். 

மேலும் படிக்க | முதல்வர் பிறந்தநாளில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... முழு விவரம்!

அதில் போதைபொருள் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலும் என 30 கிலோ மதிப்பிலான Meth என்றழைக்கப்படும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது. உடனே  DIRECTOR REVENUE INTELLGENGE அதிகாரிகள் பிரகாஷை பிடித்து மதுரை ரயில் நிலைய காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு 200 கோடி ரூபாய் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

விசாரணை மேற்கொண்ட சூழ்நிலையில் தற்சமயம் குற்றவாளியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மகாத்மா காந்திநகர் பகுதியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே வைத்து இன்னும் இவரிடம் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாகவும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் யார்? என்ற கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

200 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை சர்வ சாதாரணமாக ரயிலில் கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மதுரையில் இறங்கிய சூழ்நிலையில் இந்த போதைப் பொருட்களை எங்கே வைத்து விற்பனை செய்யப்பட இருந்தார் போன்ற பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாள்கள் முன், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ சூடோஃபெட்ரின் எனும் ரசாயனத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர். மேலும், சிக்கியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்புடைய 3500 கிலோ போதை பொருளை கடத்தி இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த போதை பொருள் கடத்தலின் மூளையாக தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் செயல்பட்டு இருப்பதும் தெரியவந்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூறியிருந்தது. அந்த போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. அவர் லேட்டஸ்டாக 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அத்துடன் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இதையடுத்து, அவரை திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

மேலும் படிக்க | இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது சாந்தன் உடல்! வேதனை விடை கொடுத்த தமிழர்கள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More