Home> Tamil Nadu
Advertisement

1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட்... சென்னையில் கின்னஸ் சாதனை!

SICA Cooking Competition 2023: தென்னிந்திய செஃப் அசோசியேஷன் (SICA) சார்பில் செஃப் ராஜ்மோகன் உருவாக்கிய 1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட் கின்னஸ் உலக சாதனை படைத்தது.

1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட்... சென்னையில் கின்னஸ் சாதனை!

SICA Cooking Competition 2023: இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தென்னிந்திய செஃப் அசோசியேஷனின் 6வது சமையல் சவால் போட்டி நடைபெற்றது.  சர்வதேச செஃப் அசோசியேசன்  (WACS) ஒப்புதலுடன் கடந்த செப்.15ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை என மூன்று நாள்களுக்கு இப்போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று (செப். 18) புனித தோமையார் மலை (St. Thomas Mount) ராடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆச்சி மசாலாவின் நிறுவன தலைவர் பத்மசிங் ஐசக், தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் செஃப் தாமு, மற்றும் பொதுச்செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் கோப்பையை வழங்கி சிறப்பித்தனர்.

முதல் நாள்  த்ரீ டயர் வெட்டிங் கேக், பட்டர் மற்றும் மார்கரின் ஸ்கல்ப்சர், பரோட்டா மற்றும் பிரியாணி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரண்டாம் நாள் பழங்கள் காய்கறிகளை அழகு படுத்துதல், அறைகளை அழகுபடுத்தும் போட்டி, இந்திய சமையல், குழு போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்றாம் நாள் பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி உணவுகள், குழு பஃபே, கேக்குகளை அலங்கரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க | கட்சியின் தலைவராக இருப்பவருக்கு பொறுமை அவசியம்

இந்த போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தலைசிறந்த சமையல் வல்லுனர்கள், நட்சத்திர விடுதிகளின் சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். குறிப்பாக, தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சார்பில் செஃப் ராஜ்மோகன் உருவாக்கிய 1121.6 கிலோ எடையுள்ள பீன் சாலட் கின்னஸ் உலக சாதனை படைத்தது.  

உணவு பழக்க வழக்க விழிப்புணர்வுக்காக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புனித தோமையார் மலைபகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக, கடந்த செப். 10ஆம் தேதி தென்னிந்திய செஃப் அசோசியேசன் SICAவின் தலைவர் செஃப் தாமு மற்றும் பொது செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்த சந்திப்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை SICAவின் 6வது ஆண்டிற்கான சமையல் போட்டி மற்றும் கண்காட்சி குறித்த தகவலை அறிவித்திருந்தனர். 

மேலும் அப்போது, இந்தியாவில் உள்ள சமையல் நிபுணர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் கூட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு தொழில்முறை தளத்தை நிறுவுதல், படைப்புத் திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்..  

தொழில்முறை போட்டியை அணுகும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் நோக்கில் லங்கா செஃப்ஸ் கில்ட் நிறுவனத்தின் மாஸ்டர் சமையல் பயிற்சியாளர் செஃப் டிமுது குமாரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த 4  சமையல் நிபுணர்களுடன் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய 4 நகரங்களில் ஆகஸ்ட் மாதம் SICA ஏற்கனவே பேஸ்ட்ரி ஆர்ட் மற்றும் ஹாட் பிளேட் பிரசன்டேஷன் குறித்த பயிலரங்குகளை நடத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாஜக நிர்வாகியும், பிரபல ரவுடியுமான பிரீ வெங்கடேசன் கொலை! நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More