Home> Tamil Nadu
Advertisement

நள்ளிரவில் பயங்கரம்... மெட்ரோ பணியின் போது விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

Chennai Metro Work Accident: சென்னை போரூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது, சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் அருகே இருந்த வீட்டில் மோதி விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

நள்ளிரவில் பயங்கரம்... மெட்ரோ பணியின் போது விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

Chennai Metro Work Accident: சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் மொத்தம் 15 பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. உள்ளூர் பொது போக்குவரத்தில் வேகமான சேவையை அளிக்கக்கூடியதாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கக் கூடியதாகவும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மெட்ரோ ரயிலுக்கும் அரசு சார்பில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, சென்னையில் பேருந்து, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்தை விட அதிவிரைவு சேவையிலும், குறைவான கார்பன் வெளியேற்றத்திலும் மெட்ரோ முன்னணியில் இருக்கிறது. எனவே, இந்தியாவின் பல நகரங்களை போன்றே சென்னையிலும் மெட்ரோவை பரந்த அளவில் கொண்டு செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. சென்னை மெட்ரோ லிமிடெட் (CMRL) சிவப்பு வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை வழங்கி வருகிறது. தற்போது, சேவையை நீட்டிக்கும் பணிகளும் நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதாவது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டமாக மூன்று வழித்தடங்கள் உருவாகப்பட உள்ளன. 45.8 கி.மீ தூரத்திற்கு மாதவரம் - சிறுசேரி சிப்காட், 26.1 கி.மீ., தூரத்திற்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், 47 கி.மீ., தூரத்திற்கு மாதவரம் - சோழிங்கநல்லூர் என மூன்று வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது-ஆ.ராசா பேச்சு!

அந்த வகையில் சென்னை போரூர் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் பணியின் போது மெட்ரோ ரயில் பணியாளரால், சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் அருகே இருந்த வீட்டில் மோதி விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது, அந்த பணியாளரின் கவன குறைவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

போருர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது அது மோதியது. இதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனை கண்ட பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதேபோல் பூகம்பம் வந்தது என்று நினைத்து அருகே இருந்த குடியிருப்புவாசிகளும் வீட்டில் இருந்து வெளியேறினர்.

மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குடியிருப்பு வாசிகள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர். வீட்டில் இருந்த பிரோ, கட்டில், பேன் போன்ற உடமைக்கள் சேதமாகின.

மெட்ரோ ரயில் பணியில் துளையிட  பயன்படுத்தப்படும் ராட்த இயந்திரம் சுமார் 100 டன் எடையில் 200 அடிக்கு மேல் உயரம் கொண்டது. சாய்வாக இருக்கும் இந்த இயந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும் போது பின்னால் இருந்த வீட்டை கவனிக்காமல் ஆபரேட்டர் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்! முழு ஆதரவு அளித்த வெற்றிமாறன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More