Home> Tamil Nadu
Advertisement

கமல் ஹாசனின் முன்ஜாமீன் மனு; திங்களன்று தீர்ப்பளிக்கும் உயர்நீதிமன்றம்!

முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளிக்கின்றது!

கமல் ஹாசனின் முன்ஜாமீன் மனு; திங்களன்று தீர்ப்பளிக்கும் உயர்நீதிமன்றம்!

முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளிக்கின்றது!

கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.

இது பெரும் விவாததுக்கு உள்ளானது. பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கமலில் கருத்துக்கு பிரதமர் மோடி உட்பட பாஜக அரசியல் தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வந்தனர். 

இதற்கிடையில் கமல் ஹாசன் மீது பாஜக-வினர் புகார் அளித்தல், கண்டனம் தெரிவித்தல் என பல்வேறு நடவடக்கைகளில் ஈடுப்பட்டனர். மேலும் இவ்விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது கமல் ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப்படிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் கமல் ஹாசன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பான தீர்பினை வரும் திங்கள் அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More