Home> Tamil Nadu
Advertisement

‘வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிவ்த்துள்ளது!!

‘வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிவ்த்துள்ளது!!

வருகிற 29 ஆம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும் என்றும் அன்றைய தினம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியப் பெருங்கடல் - தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. வருகிற 27 ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து, 29 ஆம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும். அன்றைய தினம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். புயலானது சென்னை- நாகபட்டினம் இடையே கரையை கடக்கும். 

அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆத்தூரில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்" என்று தெரிவித்தார். 

 

Read More