Home> Tamil Nadu
Advertisement

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை!

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வட தமிழகத்தை நோக்கி வரும் எனன்பதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரண்டாம் நாளாக இரவு நேரத்தில் மழை விட்டு விட்டு பெய்த நிலையில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ | சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், தென்கிழக்கு வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி..!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

ALSO READ | தமிழகத்தில் கனமழை: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் உறுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Read More