Home> Tamil Nadu
Advertisement

காற்றில் பறந்து கொரோனா விதிமுறைகள்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒமிக்ரான் மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுதியது. 

காற்றில் பறந்து கொரோனா விதிமுறைகள்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா (Coronavirus) பாதிப்பு காரணமாக இந்தியா சிக்கி தவித்து வருகிறது. 2020 ஜனவரி மாதம் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் மிக தீவிரமான பரவல் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அரசியல் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியது.

ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்தியாவில் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதற்கிடையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா (Tourists) செல்ல தொடங்கி உள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல் மே மட்டுமல்லாது டிசம்பர் மாதத்தில் மிக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுதியது. குறிப்பாக உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டினார். இதனால் படகு சவாரிக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய டிக்கெட் கொடுக்குமிடத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மிதிப்படகு, துடுப்பு படகு பயணம் செய்து உற்சாகம் அடைந்தனர். பெரும்பான்மையான சுற்றுலா பயணிகள் விசைப்படகில் பயண செய்ய வரிசையில் காத்திருந்து சென்றனர். அதேபோல உதகை பூங்காவிலும் அதிக சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More