Home> Tamil Nadu
Advertisement

RajivMurderCase: 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முனைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது குறித்து நீதிமன்ற தீர்ப்பு முழுவிவரம் கிடைத்தப்பின் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த தீர்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே வேலையில் தமிழக அரவு இவர்கள் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 15-வது நிதிக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட பின்னர்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்!

Read More