Home> Tamil Nadu
Advertisement

உக்ரைன் போருக்கு கூட அவர்தான் காரணம் என சொல்லுவார்கள்: ஜெயக்குமார் தரப்பு பேட்டி

உக்ரைன் போருக்கு கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம் என்று கூட இவர்கள் கூறலாம்: வழக்கறிஞர் இன்பதுரை பேட்டி

உக்ரைன் போருக்கு கூட அவர்தான் காரணம் என சொல்லுவார்கள்: ஜெயக்குமார் தரப்பு பேட்டி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்குகள் தொடர்பாக அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயவர்தன் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு வேண்டுமேன்றே அனுதினமும் அதிமுகவை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு  வருகின்றதாகவும்,

இதனால் தான் தன் தந்தை மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறினார். பாதிப்படையாத நபரான நரேஷை பிரியாணி கொடுத்து மருத்துவமனையில் வைத்துள்ளனர் என்றும் இப்படி பொய் எண்ணத்துடன் செயல்படும் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், 

இவர்களின் நாடகம் நிச்சயம் நீதிமன்றத்தில் வெளி வரும் என்றும் அவர் கூறினார். 

காவல்துறை அவர்கள் கடைமையை செய்திருந்தால் நரேஷ் சிறைக்கு சென்றிருப்பார், எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது, நிச்சயம் நியாயம் வெல்லும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | அடுத்த ஸ்கெட்ச் ரெடி! கைது ஆகிறாரா முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்?

தொடர்ந்து பேசிய அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, நரேஷ் குமார் கொடுத்தது தான் முதல் வழக்கு, அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்து விடும் என்பதால் 307 வழக்கை போட்டனர். நரேஷ்குமார் மருத்துவமனையில் இருந்தால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைக்காது. இந்த எண்ணத்தினால் தான் சாதாரண காயத்தில் உள்ள நரேஷ் இன்னும் மருத்துவமனையில் உள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனை, முதல்வர் உள்ளிட்ட 3 பேருக்கு இது குறித்து விளக்கம் கேட்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதற்கு பதில் கிடைக்காவிட்டால் இந்த விவகாரம்  தொடர்பாக தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் நம்பிக்கை இல்லாத காரணத்தால் நாளை நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

நாளை விசாரணைக்கு வரும் வழக்கில் புதிதாக நரேஷ்குமாரின் நிலை எண்ண என்ற மனுவை முன்வைக்க உள்ளோம் என கூறிய அவர் ஒரு அரசு தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரகளையும் பயன்படுத்து ஒரு நபரை முடக்க நினைக்கிறது. அவர் எங்கு போவார்? அதனால் நீதிமன்றத்தை நாடுகிறார். 

அதிகாரிகள் இதற்கு துணை போக கூடாது என தெரிவித்தார். உக்ரைன் போருக்கு கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம் என்று கூட கூறலாம், என்ன செய்வது? சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அப்படி கூறினாலும் நாங்கள் சட்டத்தின் மூலம் அதற்கு போராடுவோம்’ என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அடுத்தடுத்து திமுகவில் இணையும் அதிமுக கவுன்சிலர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More