Home> Tamil Nadu
Advertisement

உங்கள் பகுதியில் "தடுப்பூசி முகாம்" வேண்டுமா? இதை செய்யுங்கள் -சென்னை மாநகராட்சி அதிரடி

45 வயதுக்கு மேற்பட்டவர்களை 30-க்கும் அதிகமான நபர்களை ஒன்றாக திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். அந்த பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாமை அமைத்துத் தரப்படும்" என சென்னை மாநகராட்சி முக்கியத் திட்டத்தை அறுமுகப்படுத்தி உள்ளது.

உங்கள் பகுதியில்

சென்னை: தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று நோய்யை கட்டுப்படுத்தும் நோக்கில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை புதிதாக பதவியேற்றள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு (TN Govt) மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு கட்டுபாடு முதல் ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால் நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பதி ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் 2-வது டோஸ் போடும் பணி மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் 2-வது டோஸ் தடுப்பூசி போதும் வாரமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், நாட்டில் நிலவும் தடுப்பூசி (Corona Vaccination) பற்றாக்குறையை போக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 10 கோடி டோஸ்களாகவும், கோவாக்சின் உற்பத்தி 8 கோடி டோஸ்களாகவும் அதிகரிக்கப்படும் என உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்திருப்பது ஆறுதலான விசியமாகும்.

ALSO READ |  5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவில் தான் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு மீது பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு முதல் தடுப்பூசி வந்தது ஜனவரி 12 ஆம் தேதி. ஆனால் முந்தைய அதிமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டில் 9% தடுப்பூசிகள் வீணாகின. அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழ்நாட்டுக்கு போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டு பெறாமல் அலட்சியமாக இருந்தன் காரணமாக, தமிழகத்திற்கு தடுப்பூசி குறைவாக கிடைத்துள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை போக்குவதற்காக, நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு வேகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் அதிக அளவில் கொரோனா தொற்று பரவல் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ALSO READ |  விடாமல் அச்சுறுத்தும் கொரோனா: இன்று தமிழகத்தில் 33,075 பேர் பாதிப்பு, 335 பேர் பலி

அந்த வரிசையில், தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்வதற்காகத் புதிய தளம் ஒன்றை சென்னை மாநகராட்சி உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுகாதாரத்துறை இணை ஆணையர் ஆல்பி ஜான், "நீங்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேல் உள்ள 30 பேரை ஒருங்கிணைக்க முடியுமா? இதை ஒரு நிறுவனமோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கம் சார்பிலோ அல்லது எந்தவொரு தன்னார்வ குழு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களை 30-க்கும் அதிகமான நபர்களை ஒன்றாக திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். அந்த பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாமை அமைத்துத் தரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

ALSO READ |  சென்னை மண்டலங்களுக்கு தலா 3 கோவிட் சிறப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More