Home> Tamil Nadu
Advertisement

EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை

OPS vs EPS : “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, குமுறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். இவர்களின் மோதலால் அதிமுக சின்னம் முடங்கிப் போகிறது

EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பொறுப்புகளுக்கான தேர்தலை அதிமுக வேறு வழியில்லாமல் தவறவிடுகிறது. உட்கட்சி தகராறால் கட்சியின் செல்வாக்கு குறைவதாக தொண்டர்களும் நிர்வாகிகளும் குமுறி வருகின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 500 மேற்பட்ட மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை விசாரிக்க மறுப்பு!

ஆனால் கட்சியின் நிலவக்கூடிய பிரச்னைகளால் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்திட மறுத்துவிட்டார். மனுக்களில் கையெழுத்திடுமாறு எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியும் அதனை ஓபிஎஸ் நிராகரித்துவிட்டார். இதன் காரணமாக இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் அதிமுக-வினர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுமாறு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இப்படி கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலால் சின்னம் முடங்கிப் போவதை கட்சித் தொண்டர்கள் விரும்பவில்லை. “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, என அதிமுக தொண்டர்கள் குமுறுகிறார்கள்.

மேலும் படிக்க | சென்னையில் பள்ளி மாணவிகளை டேட்டிங் அழைத்துச்சென்று சில்மிஷம்... ஆரசு பள்ளி ஆசிரியரின் கைவரிசை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More