Home> Tamil Nadu
Advertisement

Elections 2019: மகாராஷ்டிரா, அரியானாவில் மோடி அலை; தமிழகத்தில் எடப்பாடியார் அலை

தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வைத்து பார்த்தால் தமிழகத்தில் அதிமுக அலையும், மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்தில் பாஜக அலையும் வீசுவது தெளிவாகி உள்ளது. 

Elections 2019: மகாராஷ்டிரா, அரியானாவில் மோடி அலை; தமிழகத்தில் எடப்பாடியார் அலை

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 21 ஆ தேதி நடைபெற்ற 51 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், 2 மக்களை தொகுதிக்கான தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தை பொறுத்த வரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதேபோல மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும் போது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும், இரண்டு மாநிலங்களில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த முன்னிலை வைத்து பார்த்தால் தமிழகத்தில் அதிமுக அலையும், மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்தில் பாஜக அலையும் வீசுவது தெளிவாகி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. அந்த வகையில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 180 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், திமுகவை விட சுமார் 11000 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 3000 வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார். 

Read More