Home> Tamil Nadu
Advertisement

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? முழு விவரம்!

தமிழ்நாட்டை பொறுத்த வரை 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? முழு விவரம்!

சென்னை: கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தமிழகத்தில்  234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை (Assembly Election Results 2021) தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் (Postal ballots Counted) எண்ணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன என்ற விவரத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

தமிழகம் (TN Assembly Election 2021) முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். 

ALSO READ |  Tamil Nadu Election Results 2021: ஆன்லைனில் RESULT ஐ எவ்வாறு பார்ப்பது?

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தமிழ்நாட்டை பொறுத்த வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

fallbacks

Assembly Election Results 2021

fallbacks

fallbacks

fallbacks

fallbacks

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More