Home> Tamil Nadu
Advertisement

உலக தரம் வாய்ந்ததாக மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 760 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் மல்டி மாடல் போக்குவரத்து மையமாக மறுவடிவமைக்கப்பட உள்ளது.

உலக தரம் வாய்ந்ததாக மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 760 கோடி ரூபாய் செலவில் அடுத்த 40 ஆண்டுகளுக்கான உலகத் தரம் வாய்ந்த சகல வசதிகளுடன் மருவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.  ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதனை கையாள, சென்னை எழும்பூரில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகள் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட உள்ளது.  புறநகர் இரயில், மெட்ரோ மற்றும் எம்ஆர்டிஎஸ் ஆகியவற்றிற்கான பல-மாடல் போக்குவரத்து மையமாக இந்த ரயில்நிலையம் செயல்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 6 ஆண்டுகளுக்குப் பின் ஜாமீனில் விடுதலையான இந்திராணி முகர்ஜி

தற்போது இந்த ரயில் நிலையத்தில் சுமார் 35 மெயின்லைன் ரயில்கள், 240 புறநகர் ரயில்களும், தினசரி சுமார் 24,129 பயணிகளும் வந்து போகின்றனர்.  2020-2021 ஆம் ஆண்டில் ரயில் நிலையத்தின் மொத்தப் பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட வருமானம் ரூ.125 கோடி ஆகும்.  கடந்த வியாழக்கிழமையன்று சென்னை எழும்பூருக்குச் சென்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் நிலையத்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து, மறுசீரமைப்புத் திட்டத்தின் பிளான் குறித்து ஆய்வு செய்தார். 

பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்திய ரயில்வேயை மாற்றுவது இந்திய பொருளாதாரத்தை மாற்றுவதற்கு வழி வகுக்கும் என்று பிரதமர் நம்புவதால், இந்திய ரயில்வேயை மாற்றும் தொலைநோக்கு பார்வை உள்ளது.  அந்த வகையில் பல்வேறு ரயில் நிலையங்களை மறுசீரமைப்பது அதன் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்.  மேலும் ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு செய்த பிறகு பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க | போலி என்கவுண்ட்டர்...விசாரணை ஆணைய அறிக்கையால் ஹைதராபாத் போலீஸாருக்கு சிக்கல்

ரயில் நிலையத்தை மாரு சீரமைப்பு செய்வதன் மூலம், தனித்தனி வருகை, புறப்படும் வழித்தடங்கள் மூலம் பயணிகளின் தடையற்ற இயக்கம், முகப்பில் அழகிய விளக்கு அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட நிலையங்கள், கண்ணை கவரும் வகையில் சிறந்த இயற்கையை காட்சிகள் ஏற்படுத்தப்படும்.  வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கென்ன்று பிரத்யேகமாக பாதைகள் வடிவமைக்கப்படும்.  ரயில் பயணிகளின் வசதிக்காக சுகாதாரமான நீர் மற்றும் எரிசக்தி மேலாண்மை போன்றவை சிறப்பான முறையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் முதல் கட்டமாக மறு சீரமைப்பு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More