Home> Tamil Nadu
Advertisement

ராணி எலிசபெத் கொடுத்த விருந்து - துரைமுருகன் சொன்ன கதை!

Duraimurugan Speech About Cauvery : காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் என்ன ? உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது - துரைமுருகன்   

ராணி எலிசபெத் கொடுத்த விருந்து - துரைமுருகன் சொன்ன கதை!

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அனைக்கட்டு நந்தகுமார், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தவர்களை துரைமுருகன் சால்வை அணிவித்து வரவேற்றார். 

மேலும் படிக்க | கட்ட விட மாட்டோம்.! - தமிழ்நாடு ; கட்டியே தீருவோம்! - கர்நாடகா

பின்னர் விழாவில் பேசிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், ஆனாலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தான் சட்டமன்ற உறுப்பினராக இத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் தன்னிடமில்லை என்று பெருமையாக கூறிய அவர், அப்படித்தான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது ராணி எலிசபெத் மது விருந்து கொடுத்ததாகவும், ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறிய துரைமுருகன், இதுவரை தான் மது அருந்தியதே கிடையாது என்று தெரிவித்தார். 

பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காவிரி நதிநீர் ஆணையத்தில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும் பின்னனியில் உள்ளது போலும் இருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சொல்லுவதும் தவறு ; காவிரி மேலாண்மை ஆணையம் சொல்லுவதும் தவறு. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அதிகாரங்கள் என்னென்ன என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லியுள்ளது. 

ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறது. இது சட்டவிரோதம். உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது. சுற்றுச்சூழல்துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் வடிகால்களை மேம்படுத்த உள்ளாட்சித்துறை, நீர்வளத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அதில் உரிய பணம் ஒதுக்கி பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் மழைகாலத்திற்குள் முடியும். தமிழக முதல்வர் 28 ஆம் தேதி ஆம்பூர் வந்து திருப்பத்தூர் விழாக்களில் பங்கேற்கிறார். பின்னர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை திறக்கிறார்.  பின்னர் நலத்திட்டங்களை வழங்குகிறார். 

மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

மறுநாள் ராணிப்பேட்டையில் விழாக்களை முடித்துவிட்டு முதலமைச்சர் சென்னை செல்கிறார். குடியரசுத் தேர்தலில் யஷ்வந்த் சிங்காவை வேட்பாளராக ஆதரிப்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. பிரதான எதிர்க்கட்சியான எங்களிடம் பாஜக ஆதரவு கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்காதது ஜனநாயகமில்லை. பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி நாங்கள்தான். ஆனால் எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை’ என்று தெரிவித்தார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More