Home> Tamil Nadu
Advertisement

இரட்டை இலை விவகாரம்; சுகேஷ்ஸின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு!

இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதான சுகேஷின் ஜாமீன் மனு டிசம்பர் மாதம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை விவகாரம்; சுகேஷ்ஸின்  ஜாமீன் மனு ஒத்தி வைப்பு!

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு  ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி  தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன்  டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்டுகள் நரேஷ், லலித்குமார் ஆகியோரும்  கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை சுகேஷ் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுகேஷ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதன்மீது இன்று விசாரணை நடந்தது.  இதில் சுகேஷின் ஜாமீன் மனு விசாரணையை டிசம்பர் 18ந்தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

 

 

 

Read More