Home> Tamil Nadu
Advertisement

கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வருகின்ற 15-ம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீனவர்களுக்கு மீன் வளத்துறை அறிவித்துள்ளது.

கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மீன் வளத்துறை இயக்குநரிடம் இருந்து ஒரு அறிக்கை வந்துள்ளது. அதில், 'தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையின் தென் பகுதியில் ஒரு புயல் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

வருகின்ற 15-ம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

காற்றழுத்த தாழ்வு நிலையால் சுமார் 6 கி.மி வேகம் வரை காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த காற்றழுத்தமானது குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே வலுவான மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தள்ளது. 

இதையடுத்து, திருவனந்தபுறம், கன்னியாகுமாரி பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்வதையும் தவிர்க்க வேண்டும் என மீனவர்களுக்கு தெரிவித்துள்ளது.

Read More