Home> Tamil Nadu
Advertisement

ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பதுதான் திமுகவின் வேலை - அண்ணாமலை காட்டம்

 Annamalai Blames DMK Against Governor : செல்ஃபி வித் அண்ணா என்ற தலைப்பில் பாஜக நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு மாணவிகளும், போலீஸாரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பாஜகவினருக்கே அதன் தலைவர் அண்ணாமலை சொன்ன அறிவுரை என்ன ?  

ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பதுதான் திமுகவின் வேலை - அண்ணாமலை காட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில், நமக்காக நம்ம எம்.எல்.ஏ  என்ற  மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது. கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில்,  பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 

மேலும் படிக்க | ‘சட்டம் ஒழுங்கு சீர்கெட ஐடியா தருவார் அண்ணாமலை’ - போட்டுடைத்த பாஜக இளைஞரணி

“தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக வருகின்ற 21 ம் தேதியன்று தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது குறித்து ஆதாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளோம். முதலமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாடதீர்கள். இந்த விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்கவில்லை. எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதலமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும்.

திருப்பூர் கல்லூரிகளில் ‘செல்ஃபி வித் அண்ணா’ நிகழ்ச்சிக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் கேள்விப்பட்டேன். கல்லூரிகளுக்குள் முன் அனுமதியில்லாமல் செல்வதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என தொண்டர்களிடம் கூறினேன். கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் பா.ஜ.க வினருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இது பெரிதுபடுத்த வேண்டிய விசயமல்ல. கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பது தான் எனது நிலைப்பாடு. இதுபோன்ற நிகழ்ச்சிகளை பா.ஜ.க வினர் இன்னும் கவனமாக செய்ய வேண்டும். 

அ.தி.மு.க உட்கட்சி விசயத்தில் பா.ஜ.க நுழையாது. பா.ஜ.க, அ.தி.மு.க உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஏகமனதாக இந்த வரி போடப்பட்டது. இதில் அரசியல் செய்வது நன்றாக இருக்காது. இப்பிரச்சனைக்கான தீர்வை பா.ஜ.க போராடி கொண்டு வரும்.

தமிழகத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஊழல் மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். யாரும் எங்கும் தப்பிக்க முடியாது. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்திற்கு செல்வோம். பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அண்ணாமலையின் திறமை கருணாநிதி, ஜெயலலிதாவுக்கே இல்லையாம் - அதிர்ச்சி கொடுத்த ராதாரவி

ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பது தான் தி.மு.க.வினரின் முழு நேர வேலை. ஆளுநர் செயல்பாட்டில் தவறு என யாரும் சொல்ல முடியாது. அவரது செயல்பாட்டை, பேச்சை தி.மு.க வினர் அரசியலாக்குகின்றனர். மக்களுக்கு தி.மு.க  அரசின் மிகப்பெரிய சலிப்பு வந்து விட்டது. அதனை திசை திருப்ப ஆளுநரை வம்புக்கு இழுத்து தி.மு.க  அரசியல் செய்கிறது. தி.க. தலைவர் வீரமணிக்கு சட்ட திட்டம் தெரியுமா என சந்தேகமாக உள்ளது. பெரியார் பல்கலை கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

முதுகலை வரலாறு கேள்வித்தாளில் 10 வது கேள்வி பெரியாருக்கு யார் பட்டம் கொடுத்தது எனவும், 11 வது கேள்வி சாதி பற்றியும் உள்ளது. ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் சாதியையும் வைத்துக் கொண்டு தி.மு.க  70 ஆண்டுகளாக அரசியல் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் நடந்த தவறை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். வீரமணி தான் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

நான் தி.மு.க வினரை வசைபாடவில்லை. தி.மு.க  தான் என்னை வசைபாடுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரம் செய்கிறது. தி.மு.க விற்கும், பா.ஜ.க விற்கும் எந்த பகைமையும் கிடையாது. கொள்கைகள் தான் வேறு. தி.மு.க வினர் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்” என என அண்ணாமலைத் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More