Home> Tamil Nadu
Advertisement

ஆளுநர் தேநீர் விருந்து... ஆளுங்கட்சி புறக்கணிப்பு - காரணம் என்ன?

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.  

ஆளுநர் தேநீர் விருந்து... ஆளுங்கட்சி புறக்கணிப்பு - காரணம் என்ன?

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

fallbacks

ஏற்கனவே நீட் தொடர்பான மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் பல நாள்கள் ஆகியும் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

மேலும் இன்று திமுக அமைச்சர்கள் நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநரை சந்தித்தனர். அப்போதும் மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் தேநீர் விருந்தில் பங்கேற்றால் அது தேவையற்ற விவாதத்தை கிளப்பும் என ஆளுங்கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் நினைப்பதால் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அமைச்சர் ஆய்வு... ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

முன்னதாக ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இன்று மாலை கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேனீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது. நீட் விவகாரம் குறித்து எந்த உத்திரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை

இன்றைய சந்திப்பின் பொழுது, மத்திய அரசிற்கும், குடியரசுத்தலைவருக்கும் அனுப்பி வைப்பதற்கான காலவரையறையும் ஆளுநர் தெரிவிக்கவில்லை. மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவிற்கு மதிப்பளிக்கும் வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது வருத்தமளிக்கிறது” என கூறினார்.

மேலும் படிக்க | அம்பேத்கர் பிறந்தநாள் - உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் மரியாதை

இதனையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More