Home> Tamil Nadu
Advertisement

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை.!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு  மாணவர் சேர்க்கை.!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில்  மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கல்லூரி கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே "மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.அவர் கூறியபடி முதலாம் ஆண்டில் 150 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.இதன் காரணமாக தற்போது விறுவிறுப்பாக மருத்துவக் கல்லூரியினை கட்டு முடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.

ALSO READ : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - எதெற்கெல்லாம் தடைகள் ?

கட்டிடப் பணி நடைபெறும் தகவல் குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தங்கவேல் கூறியதாவது:

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளில் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பறைகள் , விடுதி கட்டிடங்களில் மின்சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் வரும்பொழுது கட்டிடம் தயாராகிவிடும்.

மேலும் கூடுதல் கட்டிடங்களையும் கட்டி முடித்து டிசம்பர் மாத இறுதிக்குள் மருத்துவ கல்லூரியின் அனைத்து கட்டுமான பணிகளையும் முடித்து ஒப்படைத்து விடுவோம். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

பின்பு இது குறித்து மருத்துவக் கல்லூரி டீன் விஜயகுமார் கூறியதாவது: 

"திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஜனவரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கி விடும். பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டனர் என்று கூறினார்.

ALSO READ : Bigg Boss 5 Tamil contestants: போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வ பட்டியல் இதுவா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More