Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதில் காலதாமதம்!

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ஆம் நாள் வெளியாக வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதில் காலதாமதம்!

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ஆம் நாள் வெளியாக வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பெயர் பட்டியலின் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்காளர் பட்டியலில் வாங்களார் தங்களது பெயர் விவரங்கள் சரியாக உள்ளது என திருத்திக்கொள்ள சிறப்பு முகாம்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதல் அக்டோபர் 31-ஆம் நாள் வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க 13,73,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகப்படிதயாக சென்னையில் 99,458 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,696 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயரை நீக்கம், திருத்தம் மேற்கொள்ள 20,07,412 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த குறிப்பிட்ட நாட்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசிலினை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 10,00,000 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரியில் வாக்காளர் அட்டை பெற்றிருப்பதால், அவற்றில் எது சரியானது என்பதைக் கண்டறிந்து களைவது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இயலவில்லை எனவும், கூடுதல் அவகாசம் வேண்டியும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More