Home> Tamil Nadu
Advertisement

இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி

திருச்சியில் 5 லட்சம் ரூபாய் செலவில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம்; உறவினர்கள் நெகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56) ஆவார். கடந்தாண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். 

இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது. உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் செல்வராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

மேலும் படிக்க | ஏழு பேரும் குற்றவாளிகள் மட்டுமே.! - அண்ணாமலை ஆவேசம்

அதன்படி தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஷ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். எனவே தந்தையின் கடைசி ஆசையை நிருவெற்றும் வகையில், இந்த குறையை போக்க பத்மாவதி குடும்பத்தினர் ஒரு நெழ்ச்சியான சம்பவத்தை செய்துள்ளனர். 

fallbacks

அந்த வகையில் பத்மாவதி குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். மேலும் செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள். இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அரைவேக்காடு அண்ணாமலை - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Read More