Home> Tamil Nadu
Advertisement

#CycloneGaja கஜா புயல் எதிரொலி.... அவசர எண்களின் முழு விவரங்கள்

கஜா புயல் பற்றி தெரிந்துக்கொள்ளவும், ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் உடனடியா தொடர்புக்கொள்ள அவசர எண்கள் அறிவிக்கபட்டு உள்ளது

#CycloneGaja கஜா புயல் எதிரொலி.... அவசர எண்களின் முழு விவரங்கள்

கஜா புயல் நள்ளிரவில் நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடந்தது. காலை 9 மணிக்குள் முழுவதும் கரையை கஜா புயல் கடக்கும் எனத் தெரிகிறது. கஜா புயல் வலுவிழக்க இன்னும் குறைந்தது ஆறு மணி நேரம் ஆகலாம் என கூறப்பட்டு உள்ளது. 

கஜா புயல் கரையை கடந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை செய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள பத்து மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கஜா புயல் காரணமாக எந்தவித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்ப்படாமல் இருக்க தமிழக அரசு மற்றும் தேசிய மீட்புக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தொடர்ந்து கஜா புயல் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது. 

கஜா புயல் பற்றி தெரிந்துக்கொள்ளவும், ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் உடனடியா தொடர்புக்கொள்ள அவசர எண்கள் அறிவிக்கபட்டு உள்ளது. பொதுவாக அவசர தேவைக்கு 1077 எண் தொடர்ப்புக் கொள்ளலாம். வானிலை பற்றி அறிய இலவச அழைப்பு எண் 1800 220 161 மூலம் தொடர்ப்புக் கொள்ளலாம். மேலும் மாவட்ட வாரியாக அவசர எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

 

Read More