Home> Tamil Nadu
Advertisement

Cyclone Mandous Live: அடுத்த 3 மணி நேரத்தில் என்னாகுமோ சென்னை?... வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை

Cyclone Mandous Live:  அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Mandous Live: அடுத்த 3 மணி நேரத்தில் என்னாகுமோ சென்னை?... வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாண்டஸ் புயலின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தை சுற்றிய பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். 

இதற்கிடையே இன்று காஞ்சிபுர, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் புயல் காரணமாக நேற்றிலிருந்தே மழை கொட்ட தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இன்று அதிகாலை மழைப்பொழிவு அதிக அளவே இருக்கிறது. இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதேசமயம் அவசர தேவையின்றி மற்ற தேவைகளுக்காக யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் அலெர்ட் - மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?

மேலும் படிக்க | Cyclone Mandous Live: மிரட்டும் மாண்டஸ் புயல்: 24 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று லீவ் - முழு விவரம்

மேலும் படிக்க | Cyclone Mandous Live: மாண்டஸ் புயலின் நிலை என்ன?... வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More