Home> Tamil Nadu
Advertisement

தொடரும் கனமழையால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழையால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கன மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டதாக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அதைக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- 

இந்த வாரம் முதலே கனமழை பெய்து வருவதாலும், பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்திரவிடப் படுகிறது என சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read More