Home> Tamil Nadu
Advertisement

ISRO-வின் புதிய தலைவருக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ஏ.எஸ். கிரண் குமாரின் பதவி காலம் நாளையுடன் (மூன்றாண்டு) முடிவடைகிறது.

ISRO-வின் புதிய தலைவருக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் ஏ.எஸ். கிரண் குமாரின் பதவி காலம் நாளையுடன் (மூன்றாண்டு) முடிவடைகிறது.

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே. சிவன் அவர்களை நியமிப்பதற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதயனைடுத்து கே. சிவனை இஸ்ரோ புதிய தலைவராக நியமித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. இவர் மூன்றாண்டு காலம் பதவி வகிப்பார். 

இதனையடுத்து கே. சிவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார.

இந்த வாழ்த்துசெய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

fallbacks

தற்போது இவர் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ளார்.

கே. சிவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை பொறியியல் முடித்துள்ளார். 2006-ம் ஆண்டு மும்பை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இஸ்ரோவில் 1982-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் இவர் பல்வேறு திட்டங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More