Home> Tamil Nadu
Advertisement

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மாநிலமாக இருக்காது - டி.ராஜா பகீர் குற்றச்சாட்டு

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இருக்கிறது என தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் டி. ராஜா, தமிழ்நாட்டை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மாநிலமாக இருக்காது - டி.ராஜா பகீர் குற்றச்சாட்டு

நாகையில் டி.ராஜா பிரச்சாரம்

இந்திய கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் வை. செல்வராஜை ஆதரித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், " தப்பித் தவறி பிஜேபி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இருக்கிறது. எனவே இந்தியாவை காப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியை அகற்ற வேண்டும். 

பாமக மீது விமர்சனம்

தமிழ்நாட்டினுடைய உரிமைகளை காப்பாற்றுவதற்காக, தமிழ்நாட்டினுடைய அதிகாரங்களை காப்பாற்றுவதற்காக, பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. பெயரில் தான் பாட்டாளி மக்கள் கட்சி, ஆனால் அக்கட்சி அணி சேர்ந்திருப்பது அதானி, அம்பானிகளை வளர்க்கும் பெரு முதலாளிகளை வளர்க்கும் பாஜக கட்சியுடன். இது என்ன அரசியல் மிஸ்டர் ராமதாஸ்? என ராமதாஸ் அய்யாவை கேட்க வேண்டியுள்ளது. பெயரில் பாட்டாளி மக்கள் கட்சி என்று வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பது சரிதானா?, இது ஒரு கொள்கை துரோகம் இல்லையா?. 

மேலும் படிக்க | ''தமிழ்நாட்டிற்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது'' - எ.வ.வேலு

தமிழ்நாட்டை காக்கும் தேர்தல்

தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு இன்றைக்கு களத்தில் நிற்கிறது. ஒரு புதிய நம்பிக்கையோடு இந்த தமிழ் நாட்டை காப்பது மட்டும் அல்ல, இந்தியாவை காப்பதற்கு தமிழ்நாடு முன்கள போராளியாக  இருக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பது ஒவ்வொருவருடைய தேசபக்த கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

மீண்டும் சுதந்திரபோர்

1947ல் அளப்பரிய தியாகங்களை செய்தது காலனி ஆதிக்கத்தை முறியடித்து சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம். இன்றைக்கு பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். நாட்டை பாரதிய ஜனதா கட்சியின் பிடியிலிருந்து  விடுவிக்கபட வேண்டும். இதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் வைக்கிற வேண்டுகோள். இந்தியா கூட்டணி அமைப்பின் சார்பில் நாங்கள் வைக்கிற வேண்டுகோள் இந்தியா முழுவதிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி அகற்றப்பட்டு மக்களுக்கான ஒரு நல்லாட்சி மாநில உரிமைகளை பாதுகாக்கிற ஒரு கூட்டாட்சி மக்களுடைய வாழ்வாதாரங்களை காப்பாற்றுகிற ஒரு மக்கள் நல அரசு மத்தியிலே அமைய வேண்டும். 

பாரதிய ஜனதா கட்சியை இந்த தேர்தலில் அகற்ற வேண்டும், விரட்டி அடிக்க வேண்டும், மோடியை பிரதமர் என்ற கோலத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும். செய்வீர்களா?" என கேட்டு ஆவேசமாக தன்னுடைய உரையை முடித்தார்.

மேலும் படிக்க | மோடி தமிழர்களின் மனதில் நிற்கமாட்டார் - மா.சுப்பிரமணியன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More