Home> Tamil Nadu
Advertisement

கோவையில் எரிவாயு குழாய் வெடிப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Gas Pipeline Blast CCTV Footage: கோவையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தபோது எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டதில் வாயு கசிந்து பீதி ஏற்பட்டது

கோவையில் எரிவாயு குழாய் வெடிப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கோவை: கோவை மாவட்டத்தில், குழாய்கள் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை, இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயுவை விநியோகிக்கும் பொருட்டு,கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டன.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய்கள் மூலமாக காஸ் விநியோகிக்கப்பட உள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. அப்போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது.

மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70

இதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.

தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் எரிவாய் குழாய் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் பொழுது அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியும் , இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பியதும் பதிவாகியுள்ளது. 

எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டதால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளைப் பார்த்த மக்கள், அதை வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More