Home> Tamil Nadu
Advertisement

E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

தமிழ் நாட்டில் இருந்து வருவோர்களிடம் இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

E-Pass இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: தமிழ் நாட்டில் இருந்து வருவோர்களிடம் இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி (Narayanasamy) தெரிவித்துள்ளார். முதலில் கொரோனா வைரஸ் (Coronavirus) குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி (CM Narayanasamy) கூறியது, "இ- பாஸ் (E-Pass) இருந்தாலும் சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற புதுச்சேரிய முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மாட்டோம். அப்படியே மீறி வருபவர்கள் தனிமைப் படுத்ப்படுவார்கள்.  கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவிக்கு தவிர வேறு யார் வந்தாலும் அனுமதி கிடையது என திட்டவட்டமாக முதல்வர் கூறியுள்ளார்.

Also Read | அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் -புதுவை முதல்வர் உறுதி!

புதுச்சேரியை பொறுத்த வரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடாக தான் இருக்கிறது. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் தான் மாநிலத்தில் நோய்த்தொற்று பரவுகிறது. அதனால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இன்று நடந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.

நாளை முதல் முககவசம் (Face Mask) அணியாமல் சென்றால் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும். வியாபாரிகள் தனிமனித இடைவெளியை கடை பிடிக்கவில்லை என்றால் அபாரதம் அதிகப்படுத்தப்படும் எனவும் கூறினார். 

Also Read | மாநிலத்திற்கான நிதி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: புதுச்சேரி முதல்வர் வருத்தம்

புதுச்சேரியில் இன்று ஓரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus in Pudhucherry) உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

Read More