Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் மதமாற்றம்? தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முக்கிய தகவல்!

தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க மறை மாவட்ட 100வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,  கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டனர்.  

தமிழகத்தில் மதமாற்றம்? தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முக்கிய தகவல்!

பாஜகவினர் மைக்கேல் பட்டியில் மதமாற்றம் நடைபெற்று வருவதாக கூறிய நிலையில் மைக்கேல் பட்டியில் மதமாற்றம் செய்யப்படவில்லை, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இதுபோன்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை என உச்சநீதிமன்றத்தில் நிரூபித்தது தமிழக அரசு என்பது பெருமைக்குரியது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க மறை மாவட்ட 100வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  விழாவிற்கு கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு,  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குருவானவர்கள் கன்னியாஸ்திரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசும்போது, 7000 ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவம் இந்தியாவிற்கு வந்துவிட்டது, கேரளாவில் இருந்து வந்த தந்தை ஆண்ட்ரிக் அடிகளார் புன்னைக் காயலில் தமிழில் அச்சு இயந்திரத்தில் புத்தகம் அச்சிட்டவர் ஆண்ட்ரிக் அடிகளார் என்பது வரலாற்று உண்மை. 

மேலும் படிக்க | CM Stalin Delta Visit: மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கீழ் 251 பள்ளிகள் இயக்கப்பட்டு வருகிறது, வ உ சி போன்ற தலைவர்கள் படித்ததும் தூத்துக்குடி மறை மாவட்ட பள்ளி தான் என்பது பெருமைக்குரியது,  தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் பள்ளிகளை உருவாக்கியது சுகபோகமாக வாழ்வதற்கு அல்ல, வறுமையில் இருந்தவர்களுக்கு கோதுமையை வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு வறுமையில் இருந்தவர்களை படிக்க வைத்தது தூத்துக்குடி மறை மாவட்டம், வங்கியின் வாயிலுக்கு கூட செல்ல முடியாத நிலையில் இருந்த கடைநிலை ஊழியர்களுக்கு வங்கி கடன் மூலம் சைக்கிள் வாங்கி கொடுத்து பள்ளிக்கு வர வைத்தது இந்த மறை மாவட்டம் என்றார். மேலும் அவர் பேசும் போது, பாஜகவினர் மைக்கேல் பட்டியில் மதமாற்றம் நடைபெற்று வருவதாக கூறிய நிலையில் மைக்கேல் பட்டியில் மதமாற்றம் செய்யப்படவில்லை, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இதுபோன்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை என உச்சநீதிமன்றத்தில் நிரூபித்தது தமிழக அரசு என்பது பெருமைக்குரியது. 

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கூட மதம் மாருங்கள் என சொல்வதும் இல்லை ஆதாயத்திற்காக இதுபோன்ற செயல்களையும் ஒருபோதும் செய்வதில்லை என்பது மறைமாவட்டத்தில் உள்ள தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் எடுத்துக்காட்டு.  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காக்கை குருவிகளை போல் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, கூடங்குளம் அணு உலையில் பல நூறு நாட்கள் போராட்டம் நடைபெற்றது, ஆனால் எந்த அரசு சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை இருந்தும் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கால் யாரும் வெளிநாட்டுக்கு, அரசு பணிக்கோ செல்ல முடியாத நிலையை உருவாக்கினார்கள். இந்த இரண்டு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் சொன்னார், சொன்னபடியே ஆட்சி பொறுப்பை அடுத்த நிமிடமே இரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்த பெருமை தமிழக முதல்வருக்கு உண்டு.

இரண்டு போராட்டங்களிலும் வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று போராட்டம் நடத்தி வருவதாக சொல்கின்றனர். சிபிஐ அதிகாரிகள் வெளிநாட்டு சதியும் இல்லை, வெளிநாட்டு நிதியும் இல்லை என  ஒன்றிய அரசினுடைய சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றனர்.  காந்தியைக் கொன்ற கோட்சேவை போல் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள் எந்த துயரத்திற்கும் அஞ்சவும் மாட்டார்கள், தந்தையர்கள் மேலும் ஒரு கோட்சேவை கூட உருவாக்க மாட்டார்கள் காந்தியை போல் அன்பு வலியை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் ஆருட் தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் அப்பாவு பேசினார்.

மேலும் படிக்க | அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More