Home> Tamil Nadu
Advertisement

இரண்டாம் போக சாகுபடிக்கு பாரூர் பெரியேரி திறப்பு; முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாம் போக சாகுபடிக்கு பாரூர் பெரியேரி திறப்பு; முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து 12.12.2018 முதல் 10.4.2019 வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

அதேப்போல்,. மணிமுத்தாறு பிரதான கால்வாயின் விதிமுறைகளின்படி 2017-2018ல் பிரதான கால்வாய் 1வது மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ் உள்ள குளங்களுக்கு முன்னுரிமை அளித்து பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டதால் தற்சமயம் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் சாதகமான நீர்நிலையை கருத்தில் கொண்டு பிரதானக் கால்வாயின் பாசன விதிமுறைகளின்படி இந்த ஆண்டு (2018-2019) பிரதானக் கால்வாயில் 3-வது மற்றும் 4வது ரீச்சுகளின் கீழ் உள்ள அனைத்து ஆயக்கட்டுகளுக்கும் முன்னுரிமை அளித்து பாசனத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 11.12.2018 முதல் 31.3.2019 வரை 111 நாட்கள் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதனால், மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி பாசனப் பரப்பில் உள்ள ஆயக்கட்டுகளின் நீர்த் தேவையினை பூர்த்தி செய்வதுடன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை மற்றும் துhத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், திருவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் உள்ள 12,018 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேவேலையில் திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து பாசன நீட்டிப்பு வழங்குமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வைத்தன் பேரில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பழைய 10 கால்வாய்ப் பாசனப்பகுதிகளுக்கு 2570 மி.க.அடிக்கு மிகாமலும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு 1330 மி.க. அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 3900 மி.க.அடிக்கு மிகாமல், பாசன நீட்டிப்பாக 12.12.2018 முதல் 31.1.2019 முடிய தகுந்த இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஆணை பிரப்பித்துள்ளார். இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More