Home> Tamil Nadu
Advertisement

இணைப்பு ரயில் தாமதம் காரணமாக சென்னை விரைவு ரயில் ரத்து!

இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இரண்டு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

இணைப்பு ரயில் தாமதம் காரணமாக சென்னை விரைவு ரயில் ரத்து!

இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இரண்டு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்., "தாதர் - சென்னை  எக்மோர் வழி செல்லும் இணைப்பு ரயில் எண் - 12163  தாமதம் காரணமாக, சென்னையிலிருந்து இன்று இரவு 10.45 மணியளவில் சேலம் செல்லும் விரைவு ரயில் (22153) ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, நாளை காலை 11.20 மணிக்கு சேலத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் (22154) இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு கிளம்புகிறது. மறுமார்க்கமாக, மாலை 4.15 மணியளவில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது,'' என்றும் தெரிவித்துள்ளது.

Read More