Home> Tamil Nadu
Advertisement

வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது!

வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது!

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவிக்கையில்... வங்க கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல் சென்னையில் இருந்து 430 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. 
இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 17-ஆம் நாள் பிற்பகலில் ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே கரையை கடக்கும். இதனால் தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். 

தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் இன்று, நாளை கடலுக்கு செல்ல வேண்டாம். 

புயல் மையம் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடப்படும் அளவில் மழைப்பொழிவு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Read More