Home> Tamil Nadu
Advertisement

சென்னை ஐஐடியை மிரட்டும் கொரோனா: 30 பேருக்கு தொற்று உறுதி! XE வகை?

700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இதுவரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் மாணவர்கள். ஒருவர் மட்டும் பணியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஐஐடியை மிரட்டும் கொரோனா: 30 பேருக்கு தொற்று உறுதி! XE வகை?

சென்னை ஐஐடியில் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு மாணவர்களை பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்த நிலையில், மக்கள் முகக்கவசம் கூட அணியாமல் சாலைகளில் சுற்றத் தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சொல்லவில்லை என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெல்லி, உத்தர பிரதேசன் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்தந்த மாநிலங்கள் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளனர். 

fallbacks

 

மேலும் படிக்க | சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை: கொடூரன் கைது!

டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை நாள்தோறும் 50 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளது. தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று புதிதாக மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இதுவரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் மாணவர்கள். ஒருவர் மட்டும் பணியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்க | மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தமிழகத்தில் தொடரும் அவலம்!

இதனையடுத்து சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர், “ஐஐடியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட 2 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த பணி இரு தினங்களில் முடிந்துவிடும். பின்னர் பாசிட்டீவ் வரும் நபர்களுக்கு கிண்டி கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், முழுவதுமாக ஒழியவில்லை. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் எக்ஸ் இ வகை வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.” என்று தெரிவித்தார்.

ஜூன் மாதம் இந்தியாவில் 4-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது XE வகை புதிய கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More