Home> Tamil Nadu
Advertisement

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; பலர் காயம்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய பெயர் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி; பலர் காயம் அடைந்துள்ளனர்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேனர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; பலர் காயம்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன் அந்த பெயர் பலகையானது திடீரென தரையை மட்டத்திலிருந்து அடியோடு பெயர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக விழுந்தது. இந்த நிலையில் மிகப்பெரிய பெயர் பலகை மேலே விழுந்ததில் மினி வேன் சாலையில் கவிழ்ந்தது. ஜிஎஸ்டி சாலையின் மேலே வைக்கபட்டுள்ள  மிகப்பெரிய பெயர் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி பலர் காயம் அடைந்துள்ளனர்.

ஜிஎஸ்டி சாலை வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் தலையில் விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாமூல் தராத பெண்ணை வெட்டிய ரவுடி மற்றும் ஒரு பெண் கைது

fallbacks

 

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சமபவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பெயிர் பலகை திடீரென சரிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More