Home> Tamil Nadu
Advertisement

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அசானி புயலால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால்  சென்னை, திருவள்ளூர் உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரா - மசூலிப்பட்டணம் அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காலை 8.30 மணியளவில் மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக வலுவிழக்கக் கூடும் 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பாபநாசம் பட பாணியில் நடந்த கொலை: உளுந்தூர்பேட்டையில் வடமாநில இளைஞர் கொலை!

நாளை கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு சென்னையில் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. 

கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | பீப் பிரியாணிக்கு தடை ஏன்? பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More