Home> Tamil Nadu
Advertisement

தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவன் மத்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!

ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி பகுதியை சேர்ந்தவர் மீர் ஹிதாயத் அலி,  இவரது மகன் அனஸ் அலி வேலூர் மாவட்டத்தில் மேல் விஷாரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு (B.E ., Mech Third year student) படித்து வருகிறார். இவரை இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து விசாரணைக்காக மத்திய உளவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வேலூர் மாவட்டம் அணைகட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் 15 மணி நேரம் மத்திய உளவுத்துறை (IB), மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் (SIU) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  

மேலும் படிக்க | காதல் மனைவியை ஆந்திரா கூட்டிச்சென்று கணவன் செய்த காரியம்... திடுக்கிடும் வாக்குமூலம்

இதில் மாணவன் இந்தியாவில் தடை செய்யயட்ட பங்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து செயல்படும் இசுலாமிய இயக்கங்களின் FaceBook, instagram போன்ற சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவற்றை விரும்பியும் (Like), பகிர்ந்து (share) உள்ளார்.  மேலும் தடை செய்யப்பட்ட இசுலாமிய இயக்கத்தின் Instagram பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். 

fallbacks

மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைவது குறித்த கோப்புகளையும் சேகரித்து உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.  இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவற்றை மத்திய உளவு துறையினரின் தொழில் நுட்ப பிரிவு மூலம் பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும் மாணவன் அனஸ் அலியின் மீது121, 122, 125, 18,18A, 20 , 38,39 ஆகிய 08 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதி துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி  வேலூர் மத்திய  சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மத்திய அரசின் திட்டங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தரும் தமிழக அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More